ப்ளூ சட்டை மாறனின் “ஆன்டி இண்டியன்”…. இதுதான் கதை…. ட்ரெய்லரால் வெளியான தகவல்….!!

ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ‘ஆன்டி இண்டியன்’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

யூடியூபில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் இயக்கி நடித்துள்ள படம் ”ஆன்டி இண்டியன்”. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் ப்ளூ சட்டை மாறன் இறந்தவராக நடித்துள்ளார்.

ஆன்ட்டி இந்தியன் டிரைலர் வெளியானது Entertainment பொழுதுபோக்கு

ஒரு பிரபலம் மரணமடைந்து விடுகிறார். அவரை இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் போன்ற மதத் தலைவர்கள் அவரவர் முறைப்படி தான் அடக்கம் செய்யவேண்டும் என்று பிரச்சனையில் ஈடுபடுகின்றனர். இதனையடுத்து, இது அரசியல் மற்றும் போலீஸ் பிரச்சனையாகவும் ஆகிறது. இந்த பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என டிரெய்லரை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *