ரத்தம் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தலைமை மருத்துவ வளாகம் அமைந்துள்ளது. இங்கு வைத்து ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்தம் வழங்கியுள்ளனர். அதோடு ரத்தம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் 90 பேர் ரத்த தானம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.