“பிளாக்மைல் செய்யும் கட்சி தான் பாஜக”….. அமைச்சர் உதயநிதி அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னையை அடுத்த கோவளம் கடற்கரையில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் ஏற்பாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் படகு போட்டி நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு இறுதிப்போட்டியை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது, 40 ஆண்டுகளுக்கு பின் கோவளத்தில் படகு போட்டியானது நடைபெற்றுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு முதல் முறையாக வந்திருக்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு பேரும் பாஜகவின் அலுவலக வாசலில் போட்டிப்போட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனிடையே பாஜக ஒரு கட்சியே இல்லை. பிளாக்மைல் (Block mail) செய்யும் கட்சிதான் பாஜக. பாஜக மற்றும் அதிமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை தேடி தரவேண்டும் என்று அவர் பேசினார்.