”அனல் மின்நிலையத்திற்கு எதிர்ப்பு” கருப்பு கொடி ஏந்தி இராமநாதபுரத்தில் போராட்டம்…!!

இராமநாதபுரத்தில் அனல் மின்நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல் மின்நிலையம்  அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 1000_த்திற்கும் மேற்பட்டோர் படகுகளில் கருப்பு கொடி கட்டியும் , கைகளில் கறுப்புக் கொடி ஏந்தியும் போராட்ட கோஷங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது , அனல் மின் நிலையத்தின் வெப்ப தன்மை கொண்ட நீர் கடலில் கடக்கும் பட்சத்தில் மீன் வளம் பாதிக்கும்.

நாங்கள் சுமார் 2 லட்சத்திற்கு அதிகமானோர் கடலை நம்பியும் , மீனை நம்பியும் வாழ்க்கை நடத்தி வருகின்றோம் என்று வேதனை தெரிவித்தனர். தற்போதைய   மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கருத்து கேட்புக் கூட்டத்திலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் ஆனாலும் இதற்கான பணி என்பது தொடர்ந்து நடைபெறுகின்றது என்று குற்றம் சாட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.