பாஜக முடிவு கவர்கின்றது… ”அமெரிக்காவிலும் கொடி பறக்கும்” அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி ..!!

பாஜக எடுக்கும் முடிவு அதிமுகவை கவர்ந்துள்ளது, முதல்வரின் கொடி அமெரிக்காவில் நாட்டப்படுமென்று அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். முதல்வரின் இந்த பயணம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகின்றார். நீலகிரி மழை வெள்ள பாதிப்பை பார்வையிட செல்ல நேரமில்லாத முதல்வர் அமெரிக்கா செல்கின்றார் , சீன் போட செல்கின்றார் என்று விமர்சித்த்தார். இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்தார்.

Image result for அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அப்போது அவர் கூறுகையில் , அந்நிய முதலீடுகளை ஈர்க்கச் செல்லும் தமிழக முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்.எந்த முதல்வரும் நிகழ்த்தாத சாதனையை முதலமைச்சர் நிகழ்த்தி வருகின்றார். அந்த ஆதங்கத்தில் முதல்வரின் பயணத்தை ஸ்டாலின் குறை கூறுகிறார். தேசியளவில் பாஜக எடுக்கும் அனைத்து முடிவுகளும் அதிமுகவை கவர்ந்துள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.