டெல்லியில் உள்ள பிரபல பல்கலைக்கழகமான ”ஜவஹர்லால் நேரு” பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பாளர் ABVP  அகில பாரதீய வித்யார்த்த பரிஷத்  அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு அம்பேத்கரிஸ்ட் மாணவர்கள்,  பெரியாரிஸ்ட் மாணவர்கள், இடதுசாரிய மாணவர்கள் உட்பட தமிழக மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே இதே போல் பாஜக மாணவர் அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள நிலவரம் என்ன என்பது ? குறித்து தமிழக மாணவரிடம்  தமிழக  விளையாட்டுத்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடியோ காலில் பேசினார். அப்போது தாக்குதல் நடத்துனது யாரு ?  ABVPயா ? விரைவில் டெல்லியில் வந்து சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.