“கர்நாடகாவில் தாமரை மலர்ந்து விட்டது” இனி மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும்- தமிழிசை..!!

கர்நாடகவை  போல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார் 

கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று  நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்  குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ஆட்சி கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார் குமாரசாமி.  கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ள  நிலையில் பஞ்சாப், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் தான் தற்போது காங்கிரஸ் ஆட்சி உள்ளது.

Related image

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை  தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கர்நாடகவை  போல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும். கர்நாடகாவில் தாமரை மலர்ந்து இருப்பது மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப் பெற உதவியாக இருக்கும். தமிழை நாங்கள் தான் காப்பாற்றுகிறோம் என ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கூறுகிறார். இது  தமிழ் தாய்க்கே பொறுக்காது. தமிழை காப்பாற்ற யாருமே தேவையில்லை அது எப்போதும் உயிர்ப்புடன் வளமுடன் இருக்கும்” என தெரிவித்தார்