ஊழலுக்கு எதிரான கட்சி பாஜக! ஊழலுக்கு ஆதரவான கட்சி காங்கிரஸ் ! மோடி பகிரங்க குற்றசாட்டு …

ஊழலுக்கு பயங்கரவாதத்திற்கு எதிராக பாஜக எடுக்கும் முடிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு மட்டுமே தெரிவிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார் 

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனதே ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன இதனை அடுத்து தேர்தல் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் பரபரப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனை அடுத்து வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் பெரியளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் சமீபத்தில் அசாம் மாநில பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு பேசினார் , நான் சாதாரணமாக பிரதமர் ஆகவில்லை நான் ஒரு காலத்தில் டீக்கடைகையில் பணிபுரிந்தவன்  தான்  இங்கே அசாம் மாநிலத்தில் பலர் என்னை போன்றவர்கள் தான் ஒரு டீக்கடைக்காரரின் மனதை இன்னொரு  டீக்கடைக்காரர் தான் புரிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்

 மேலும் காங்கிரஸ் கட்சியானது chowkidar  எனப்படும் காவலாளியை தான் எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறார்கள் என்று  நினைத்தேன் அவர்கள் என்னை மட்டும் வஞ்சிக்கவில்லை தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து கடினமாக உழைக்கும் உங்களை போன்ற தொழிலாளர்களையும் வஞ்சித்துள்ளார்கள் என்று அவர் தெரிவித்தார் .

மேலும் டீக்கடைக்காரனாக இருந்த என் ஒருவர் மீது மட்டும்தான் எதிர்க்கட்சியினருக்கு கோபம் என நான் நினைத்துக் கொண்டு இருந்ததாகவும் ஆனால் மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களுக்கு சென்றபோது  தான் தெரிந்தது என்னுடன்  தொடர்புடைய யாரையுமே அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்

நான் இதனை காரணம் இல்லாமல் கூறவில்லை கடந்த 70 ஆண்டுகாலமாக தேயிலை தோட்ட தொழிலார்கள் கடும் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர் 70 ஆண்டுகளாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்சனையை தீர்க்காமல் இருப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஊழலுக்கு பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கும் முடிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்காமல் எதிர்ப்பு மட்டுமே தெரிவித்து வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார் மேலும் ஊழலுக்கு எதிரான கட்சி பாஜக ஊழலுக்கு ஆதரவான கட்சி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சி என்று கூறியுள்ளார் .