2026-ல் பாஜக ஆட்சி நிச்சயம்… எங்கள் தலைவர் சொல் மாறப்போவதில்லை…? பாஜக நிர்வாகி அமல் பிரசாத் பேச்சு…!!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போட மாட்டேன். கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் மே மாதம் கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பாஜக, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விருப்பமில்லை. பாஜகவை வலுப்படுத்த வேண்டும். கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் 2026 இல் தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என பாஜக நிர்வாகி அமர் பிரசாந்த் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலில் தனித்து போட்டியிடவே பாஜக விரும்புவதாக அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியது தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக நிர்வாகி அமர் பிரசாந்த் பக்கத்தில் எங்கள் தலைவரின் சொல் மாறப்போவதில்லை என கூறியுள்ளார்.

Leave a Reply