செக்ஸ் வீடியோ வெளியிட்டது ”எனது கட்சியினர் தான்” பாஜக MLA குற்றச்சாட்டு ..!!

தன்னை தொடர்புபடுத்திய ஆபாச வீடியோ வெளியிட்டதுக்கு என்னுடைய கட்சிகாரர்கள் தான் காரணம் என்று பாஜக MLA குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் , பெங்களுர் மகாதேவாபுரா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அரவிந்த் லிம்பாவனி. ஒரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பது போன்ற செக்ஸ் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து நேற்று நடைபெற்ற   கர்நாடகா மாநில சட்டசபையில் அரவிந்த் லிம்பாவனி கதறி அழுதார். என்னை தொடர்புபடுத்தி, எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் போலியான ஆபாச வீடியோ இந்த வீடியோ உருவாக்கப்பட்டு  வெளியிடப்பட்டுள்ளது.

செக்ஸ் வீடியோ வெளியானதுக்கு கட்சிக்காரர்களே காரணம் - பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு

மேலும் அவர் , இன்று எனக்கு நிகழ்ந்தத இந்த நிகழ்வு நாளை இன்னொருவருக்கு ஏற்படக் கூடாது எனவே இந்த வீடியோ விவகாரம் தொடர்பான உண்மையை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.இந்நிலையில் இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஆபாச வீடியோ வெளியானது எனக்கு எதிரான சதியாகும்.  இந்த வீடியோ வெளியாக எனது கட்சியினரும் காரணம். எனது கட்சிக்காரர்கள் எனக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில்அவர்களது பெயர்களை வெளியிடுவேன் என்று பாஜக MLA  லிம்பாவனி குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *