வரலாற்று சாதனை படைத்த பாஜக ..!!

அருணாச்சல பிரேதேசத்தில் வரலாற்றில்  முதன்முறையாக ஆட்சியைப் பிடித்து பாரதிய ஜனதா கட்சி சாதனை படைத்துள்ளது .

நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது தற்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் நிலையில், மற்றொரு வரலாற்று சாதனையை அருணாச்சல பிரதேசத்தில் பாஜக நிகழ்த்தியுள்ளது. இந்தியாவின் இளம் முதலமைச்சர் என்று அனைவராலும் புகழப்பட்டவர்  பெமா காண்டூ .

இவர் தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளார். இதனை அடுத்து சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வரலாற்றில் முதன் முறையாக அருணாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டூவும் ,அவருடன் சேர்த்து 12 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.