தோல்வி பயத்தால் பாதுகாப்பு ரகசியத்தை வெளியிட்ட பா.ஜ.க!!.. வெளியாகும் அதிர்ச்சி தகவல் ..

தோல்வி பயத்தால் இந்திய பாதுகாப்பு ரகசியத்தை பா.ஜ.க வெளியிட்டதாக முன்னாள் எம்பி பா.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார் .

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆனது தற்போது புதிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு உள்ளது இந்த சோதனையில் இந்தியாவிற்கு இடையூறு அளிக்கும் விதமாகவும் மேலும் இந்திய செயற்கைக்கோள்களை பாதிக்கும் விதமாகவும் ஏதேனும் செயற்கைக்கோள்கள் பிற நாடுகளின் செயற்கைக்கோள்கள் செயல்பட்டால் அதனை தாக்கி அழிக்கும் ஏவுகணை ஒன்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது

இந்த ஏவுகணையை சோதனை செய்யும் விதமாக விண்வெளியில் செலுத்தி சோதனை மேற்கொண்டு தற்பொழுது சோதனையில் வெற்றி அடைந்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்த பாதுகாப்பு குறித்த திட்டமானது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்களிடையே இந்த ஏவுகணைத் திட்டம் குறித்து உரையாற்றினார் மேலும் இது இந்தியாவிற்கு மிகப் பெரிய பெருமை என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் பிரதமர் இவ்வாறு பேசியதற்கு முன்னாள் எம்பி பா.சிதம்பரம் என்பவர் பெரிய கண்டனத்தை தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது இந்தியாவிற்கு இடையூறு விளைவிக்கும் செயற்கைக்கோள்களை ஏவுகணைகள் மூலமாக தாக்கி விரட்டும் தொழில்நுட்பமானது பல ஆண்டுகாலமாக நம்மிடம் இருக்கிறது என்றும் புத்திசாலி அரசுகள் அந்த ரகசியத்தை பாதுகாத்து வந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்

மேலும் இந்த பாதுகாப்பு குறித்த ரகசியத்தை தற்போது மத்திய அரசு வெளியிட்டதன் நோக்கம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசானது தோல்வி பயத்தால் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த ரகசியத்தை வெளியிட்டு உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.