மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரை கடலுக்குள் பேனா சின்னத்தை அமைக்க திமுக அரசு திட்டமிட்டு இருந்தது. இதை வைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடந்ததியது. கடும் அமலுக்கு நடுவே நடந்த கருத்து கேட்புக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச முற்பட்டபோது அங்கு கூடியிருந்த திமுகவினர் தொடர்ச்சியாக கூச்சலிட்டனர்.
ஆனாலும் துணிச்சலாக பேசிய சீமான், பேனா சின்னத்தை வைங்க. ஆனால் கடலுக்குள்ள வைக்காதீங்க. அப்படி நீங்க வச்சீங்கன்னா… நான் அதை இடிப்பேன் என்று தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாம் தமிழர் கட்சியின் தம்பிமார்கள் #கடலில்பேனா_வேண்டாம் என்ற ஹேஷ்டேக்குகளில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

கருத்து கேட்பு கூட்டங்களில் நடந்த நிகழ்வுகளை, திமுகவினர் செய்த அராஜகங்களையும், வீடியோ – போட்டோவாக பதிவிட்ட நாம் தமிழர் கட்சியினர் #கடலில்பேனா_வேண்டாம் என்று பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஹேஷ்டேக்கில் பிஜேபியினரும் நாம் தமிழர் கட்சியினோடு சேர்ந்து கடலில் #கடலில்பேனா_வேண்டாம் என்ற ஹேஷ்டேக்கில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இதனால் திமுகவினர் அதிர்ச்சசி அடைந்துள்ளனர்.
#கடலில்பேனா_வேண்டாம் pic.twitter.com/yrntlkCQlH
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) January 31, 2023