பாஜக கொரோனவை விட கொடியது – முன்னாள் முதல்வர் விமர்சனம் ….!!

அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மார்ச் 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தல் குறித்தும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அசாம் சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் , காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் செய்தியாளர் சந்தித்த பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

அதில்  ஜனநாயகத்தை காக்கும் வகையில் ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் . கொரோனா வைரசை விட பாஜகவின் மதவாத வைரஸ் கொடியது. பாஜகவின் மதவாதம் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி பிளவு படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர் காங்கிரஸ் கட்சியை மக்கள் சகோதரத்துவத்துடன் , அமைதியாக வாழ வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.