ஓபிஎஸ் தேர்தல் பணிமனையில் பாஜக கொடி, தலைவர்கள் படம்!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கக்கூடிய இந்த சூழலில் அதிமுகவில் இரண்டு நிகழ்ச்சி கொண்டிருக்கின்றன ஓபிஎஸ் தரப்பணியை பனிமலையில் தற்போது பாஜக தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கிறது அதோடு மட்டுமல்லாமல் அங்கு பாஜகவினுடைய கொடியும் தற்போது இருக்கின்றது. பாஜக கொடி பிரதமர் மோடி நட்டா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் படங்களும் இடம் பெற்றுள்ளன

பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவினுடைய இரண்டு அணிகளுமே களமிறங்கி இருக்கின்றன. அதிமுகவினுடைய எடப்பாடி அணியில் தென்னரசு வேட்பாளராகவும், ஓபிஎஸ் அணியில் செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இந்த கூட்டணியை பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி எந்த அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கப்போகிறது என்ற ஒரு பெரும் எதிர்பார்ப்பும்,  குழப்பமும் நீடித்து வந்த சூழ்நிலையில் இரண்டு அணிகளுமே மாறி மாறி பாஜகவின் தலைவர்களை சந்தித்திருந்தார்கள்.

எடப்பாடி அணியை பொறுத்த வரைக்கும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பெயரிட்டு அதற்கு பிறகாக முற்போக்கை எடுத்துவிட்டு , பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி மாற்றி, மீண்டும் கூட்டணி கட்சி வேட்பாளர் என அதிமுக பணிமனையில் பேனர் வைக்கப்பட்டது. இதில் பாஜக தலைவர்கள் யாருடைய படமும் இடம்பெறவில்லை. ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சூழலில் அதிமுகவினுடைய ஓபிஎஸ் அணியும் தற்போதைய தீவிரமாக தேர்தலில்  களமிறங்கி இருக்கின்றது.  ஈரோடு முனிசிபல் காலனியில் ஒரு பணிமனை திறக்க ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். இந்த பணிமனையை பொருத்தவரைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி என இதற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பாசறை கூட்டம் என இந்த பணிமனைக்கு பெயர் சூட்டப்பட்டு, அதில் உயரமான மோடியின் உடைய புகைப்படம் மற்றும் பன்னீர்செல்வம் படம், அதேபோன்று பாரதிய ஜனதா கட்சியினுடைய கொடியும்,  இந்த தேர்தல் பணிமனையில் கட்டப்பட்டிருக்கின்றது.