பா.ஜ.க தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம்….. மோடி வாரணாசியில் போட்டியா….?

டெல்லியில் நடைபெற்ற  பா.ஜ.க வின் தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிடப்போவதாக ராஜ்நாத் சிங் கூறியதாக சொல்லப்படுகிறது. 

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் 543 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல் மே 11ம் தேதி தொடங்கி, மே 19ஆம் தேதி வரை வாக்கு பதிவுகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து , மே 23ஆம் தேதி வாக்கு பதிவு எண்ணிக்கை நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Image result for Delhi: Prime Minister Narendra Modi and BJP President Amit Shah hold Central Election Committee (CEC) meeting with Assam leaders

இந்த நிலையில், ஆளும் கட்சியான  பா.ஜ.கவின் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இன்று மாலை தொடங்கியது. இந்த ஆலோசனை  கூட்டத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு பா.ஜ.க மூத்த தலைவர்கள் பங்கேற்ற்றனர்.

இந்த கூட்டம் முடிந்த  பிறகு முதல் கட்டமாக பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  பேசியதாவது  2019 மக்களவை தேர்தலில் லக்னோவில் நானும், வாரணாசியில் நரேந்திர மோடியும் போட்டியிடப் போவதாக  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்  தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.