“மத்திய அமைச்சரை நியமிப்பதில் குழப்பம் “பாஜக தீவிர ஆலோசனை..!!

தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மே 30ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர்களாக யார் யாரெல்லாம் நியமிப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனையில் பாஜக தலைவரான அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்தால் பாஜக தலைவர் பதவியில் யாரை அமர வைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.