“பாஜக கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்” முரளிதர ராவ் நம்பிக்கை…!!

பாஜக கூட்டணி 300_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுமென்று பாஜகவின்  முரளிதர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார் 

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகின்றது. தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கட்சிகளே பிரதானமாக பார்க்கப்படுகின்றது. மேலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய நீதிக்கட்சி , புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

முரளிதர ராவ் அதிமுக கூட்டணி க்கான பட முடிவு

 

இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கூறுகையில் , மக்களவை தேர்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.