பாஜக கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

தேர்தலை முன்னிட்டு பாஜக இன்று தனது வேடப்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிட உள்ளது இதனை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு என்பது காத்திருக்கிறது இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடக்க இருக்கும் இந்த மக்களவைத் தேர்தலை குறித்து பல்வேறு கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இறுதி செய்து பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்

இதனை தொடர்ந்து தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர் தற்பொழுது பாஜக கட்சியினர் தங்களுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று இறுதி செய்து வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதனைத் தொடர்ந்து போன பாராளுமன்றத் தேர்தலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாரணாசி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார் அதில் வெற்றியும் பெற்றார் இதனைத் தொடர்ந்து மீண்டும் அதே வாரணாசி தொகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டு போட்டியிடுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன