கபாலி பட நடிகருக்கு பிறந்தநாள்…. அண்ணாத்த படப்பிடிப்பில் கொண்டாட்டம்… வைரலாகும் புகைப்படம்…!!

அண்ணாத்த படப்பிடிப்பில் கபாலி பட நடிகர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

சிவா இயக்கத்தில் முன்னணி நடிகர் ரஜினி நடித்து வரும் படம் “அண்ணாத்த”. கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடந்து வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின் போது நான்கு டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கபாலி படத்தை தொடர்ந்து அந்த படத்தில் இணைந்துள்ள நடிகர் விஸ்வாந்த் தனது பிறந்த நாளை படப்பிடிப்பின்போது படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கபாலி விஸ்வாந்த்