இங்கே இருந்ததை காணோம்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!!

இருசக்கர வாகனத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் யோகேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும் போது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த யோகேஷ் அருகில் உள்ள பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அதில் பள்ளி அக்ரஹாரத்தில் வசித்துவரும் முருகானந்தம் என்பவர் தான் இரு சக்கர வாகனத்தை திருடியவர் என தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகானந்தத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *