பைக் மீது லாரி மோதிய விபத்து… மனைவியின் கண் முன்னே கணவர் உயிரிழந்த சோகம்..!!

சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் விபத்தில் மனைவியின் கண் முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள அழகன சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநருக்கு இருதயராஜ். இவரும் இவரது மனைவியும் சங்கரன் கோவிலுக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருதயராஜ் சம்பவ இடத்திலேயே மனைவியின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மனைவி கண்முன்னே கணவர் துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *