மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தி.மு.க பிரமுகர் உட்பட இருவர் பலி…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமர் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் அமரும், கீரனூர் தி.மு.க நகர இளைஞரணி துணை அமைப்பாளரான ஜூடோ ரெக்ஸ் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இவர்கள் கீரனூர்-திருச்சி சாலையில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு எதிரே சென்ற போது காமராஜ் மற்றும் பொண்ணு என்ற தம்பதியினர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இவர்களின் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் காமராஜ் மற்றும் ஜூடோ ரெக்ஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இதனை அடுத்து படுகாயமடைந்த அமர் மற்றும் பொண்ணுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜூடோ மற்றும் காமராஜ் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *