வெளியே சென்ற தம்பதிகள்…. சட்டென ஏற்பட்ட விபரீதம்… கிருஷ்ணகிரியில் நடந்த கோர சம்பவம்…!!

ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உடையாண்டஅல்லி கிராமத்தில் மன்சூர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெஹராஜ் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த டிராக்டர் இவர்களின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட தம்பதிகள் படுகாயமடைந்தனர். அதன்பின் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மன்சூர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மெஹராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.