“இருசக்கர வாகனம் மோதி வாழை இலை வியாபாரி மரணம் “போலீசார் தீவிர விசாரணை !!..

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த வாழை இலை வியாபாரி மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது 

கரூர் மாவட்டம் அருகே உள்ள குளித்தலை என்னும் பகுதியை சேர்ந்தவர் சன்னாசி என்பவர் .இவர் புதுப்பாளையத்தில் வாழை இலை மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் புதுப் பாளையத்தில் இருந்து குளித்தலைக்கு இலைகளை விற்பனை செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று விற்பனை செய்துவிட்டு மீண்டும் புதுப்பாளையத்திற்கு  இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பின்னால் இருந்து மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் வாகனத்திலிருந்து சன்னாசி தூக்கியெறியப்பட்டார் சம்பவத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .அதன்பின் சன்னாசியை  அப்பகுதி பொதுமக்கள் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.