பீகாரை அதிர வைத்த மூளை காய்ச்சல்….128 பேர் பலி , 130 பேருக்கு சிகிச்சை…!!

பீகாரில் பரவிய மூளை காய்ச்சலால் இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தின் முசாபர்பூரில் ஜனவரி மாதம் முதல் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகின்றது. குழந்தைகளிடையே பரவி வரும் இந்த நோயின் தாக்கம் இந்த கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது.இந்த நோயின் காரணமாக கடந்த மாதத்தில் மட்டும் 11 பேர் வரை உயிரிழந்தனர்.  மேலும் இதன் பாதிப்பால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கைநாளுக்கு நாள் தொடர்ந்து ஆங்கரித்துக்கொண்டே இருந்தது.சில நாட்களுக்கு முன்பு இந்த நோய்யால் 41 குழந்தைகள் உயிரிழந்தது இந்தியா முழுவதும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மூளை காய்ச்சல் க்கான பட முடிவு

இந்த நோயின் தாக்கம் பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் இருந்தது. மேலும் இது குறித்து அந்த பகுதியில் நடத்திய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனையில் 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் , கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிக்சை பெற்று வந்த நிலையில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்நிலையில் முசாபர்பூரில் மட்டும் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128_ ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை முலை காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் 130 குழந்தைகள் இருப்பதாகவும் , தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதையடுத்து பீகார் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மூளை காய்ச்சல் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.