பிக்பாஸ் மகேஸ்வரி போலீஸ் ஸ்டேஷனில் புகார்…. யார் யார் மீது தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன்-6ல் கலந்துகொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் மகேஸ்வரி. சீசன்-6 டைட்டில் பட்டத்துக்கு அசீம், விக்ரமன் இடையில் கடும் போட்டி நிலவியது. கடைசியில் அசீம் அதிகமான வாக்குகள் பெற்று டைட்டில் பட்டத்தை வென்றார். இவரின் இந்த வெற்றி நியாயமற்றது என மகேஸ்வரி அவரின் டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

இதன் காரணமாக அசீம் ரசிகர்கள் மகேஸ்வரியை தாக்கி பேசி வந்தனர். மேலும் சிலர் அத்துமீறி அவரின் மகனையும் தவறாக பேசினர். அதற்கு மகேஸ்வரி, “என்னை எப்படி வேணாலும் பேசுங்கள், ஆனால் என் மகனை பற்றி தவறாக பேசாதீர்கள்” என்று வார்னிங் கொடுத்தார். எனினும் சிலர் மிக மோசமான கமண்ட்களை பதிவிட்டதால், மகேஸ்வரி அந்நபர்கள் மீது காவல்துறையில் புகாரளித்துள்ளார்.