பிக்பாஸ் சீசன்-7 நிகழ்ச்சி: தொகுத்து வழங்குவாரா கமல்?…. வெளியான தகவல்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை சீசன்-6 வரை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் கமலிடம் கேள்வி கேட்டனர். அதாவது, இந்த சென்னை, மெட்ராஸ் ஆக இருக்கும் போதும் நீங்கள் சினிமாவில் நடித்தீர்கள். தற்போது சென்னையாக இருக்கும் போதும் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

அப்போது முதல் இப்போது வரை மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டு வருகின்றனர். மெட்ராஸ், சென்னை இந்த இரண்டில் உங்களுக்கு பிடித்தது எது..? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல் “எனக்கு பிடித்தது தமிழ்நாடு தான். தமிழகம் கூட அல்ல. தமிழ்நாடு தான் பிடித்தது என்பதை ஒத்துக்கொண்டால் மற்ற கேள்விகளுக்கு தானாக விடை கிடைத்துவிடும்” என்று பதிலளித்தார்.

இதனிடையில் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க மாட்டார். பிக் பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியோடு முடித்துக்கொள்வார் என சமீபத்தில் செய்திகள் வெளியாகியது. ஆனால் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி முடிந்த போது மீண்டும் சந்திப்போம் எனக் கூறிவிட்டு விடைபெற்றார் கமல். இதனால் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் தான் தொகுத்து வழங்கப்போவதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.