விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 முடிவுக்கு வரப் போகிறது. சென்ற அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கிவிட்டது. யார் 6வது சீசன் வெற்றி வாய்ப்பை வெல்லப்போவது என்ற விவரத்தை அரிய ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது 100க்கும் மேற்பட்ட நாட்களை கடந்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருவழியாக இறுதி நாளை எட்டியுள்ளது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இப்பயணத்தில் இன்று 3 இறுதி போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். விக்ரமன், ஷிவின், அசீம் ஆகிய மூவரில் வெற்றியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் எகிறியுள்ளது. இன்னும் சில மணி நேரங்கள் பிக் பாஸ் இறுதி போட்டிக்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது.