விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 முடிவுக்கு வரப் போகிறது. சென்ற அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கிவிட்டது. யார் 6வது சீசன் வெற்றி வாய்ப்பை வெல்லப்போவது என்ற விவரத்தை அரிய ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது.
ஃபைனலிஸ்டாக தேர்வு செய்யப்பட்ட விக்ரமன், அசீம், ஷிவின், அமுதவாணன், மைனா இவர்களில் அமுதவாணன், மைனா இருவரும் நேற்று வெளியேறினர். இப்போது விக்ரமன், அசீம், ஷிவின் மூவர் மட்டுமே உள்ளனர். இவர்களில் இன்று நள்ளிரவோ அல்லது நாளையோ ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அதன் பிறகு இருவர் மட்டுமே கமலுடன் இறுதி மேடைக்கு செல்வார்கள்.