BIG BREAKING : ரெப்போ விகிதம் 4.4% ஆக குறைப்பு ….!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரனமாக பல்வேறு சலுகைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் , சலுகைகளையும் அறிவித்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. கொரோனா வைரசால் ஏற்படும் பின்னடைவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி தீவிரமாக களத்தில் உள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ரிசர்வ் வங்கி தீவிரமாக கவனித்து வருகிறது. ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4%ஆக குறைப்பு. ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைப்பு. ரெப்போ விகிதம் 5.5 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைப்பு என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்தார்.வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு. அதே போல ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வாடிக்கையாளர்களின் EMI குறைய வாய்ப்புள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *