20,000 கோடி நிதி திரட்ட வெளியிடப்பட்ட புதிய பங்குகள் விற்பனை ரத்து செய்வதாக அதானி குழுமம் அறிவைத்துள்ளது.
ஹிண்டர்பெர்க் நிறுவனம் அறிக்கையில் சொல்லப்பட்ட அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேடு காரணமாக அந்நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. முறைகேடு புகார் எழுந்த நிலையிலும் 20 ஆயிரம் கோடி நிதி திரட்டும் வகையில் புதிய பங்குகளை வெளியிட்டது அதானி குழுமம். புதிய பங்குகளை வாங்க சில்லறை வர்த்தகர்கள் முன்வராத நிலையில் பெருநிறுவன நிறுவனங்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்தன.
எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே விருப்பம் தெரிவித்த நிலையிலும் இன்று அதானி குழு அனைத்து பங்குகளும் வீழ்ச்சி அடைந்தன. உலக பணக்காரர்கள் பட்டியலிலும் 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால் பங்கு விற்பனையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.