ஜம்மு காஷ்மீரில் தற்போது காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி தேசிய மாநாடு கட்சி 40 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு இரு இடங்களில் NC முன்னிலை வகிக்கிறது. மேலும் பாஜகவுக்கு 27 இடங்களும் பிடிக்கு மூன்று இடங்களும் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். மேலும் 10 வருடங்களுக்குப் பிறகு தங்களுக்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பொதுமக்கள் கொடுத்ததற்காக உமர் அப்துல்லா நன்றி தெரிவித்துள்ளார்.