#BIG BREAKING: கையெறி குண்டு தாக்குதல்…. 2 பேர் பரிதாப பலி…. பரபரப்பு…..!!!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரிலுள்ள ஹரி சிங் ஹை சாலையில் அமைந்துள்ள அமீரா ஹடல் என்ற மார்க்கெட் பகுதியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் நேற்று (மார்ச்.6) பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் காவல்துறையினர், பொதுமக்கள் என்று 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொதுமக்களில் ஒரு நபர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒரு நபர் இன்று (,மார்ச்.7) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *