கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையிலையே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.