பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணனுக்கு பிறந்தநாள்…. கேக் ஊட்டிய பாலா…. வைரலாகும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் இன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதைத் தொடர்ந்து மேலும் சில சீரியல்களில் நடிக்க வந்த இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாள்தோறும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். அதன் பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி அவர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் இன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரும், ஷிவானியின் நெருங்கிய நண்பருமான பாலா அவருக்கு கேக் ஊட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

https://www.instagram.com/p/COfM9w8s6fl/?igshid=1j4x6gxcls8no

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *