செம மாஸ்…. பாகுபலி, கேஜிஎஃப் போல் உருவாகும் ‘புஷ்பா’…. தயாரிப்பாளர் தகவல்…!!!

பாகுபலி, கேஜிஎஃப் திரைப்படத்தைப் போல புஷ்பா திரைப்படம் உருவாகிறது என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்துள்ளார்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. ஆகையால், பல படங்களின் படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புஷ்பா திரைப்படத்தின் படப்பிடிப்பும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் இப்படத்தை பற்றி கூறியதாவது, பாகுபலி மற்றும் கேஜிஎப் படத்தை போல புஷ்பா திரைப்படமும் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. மேலும் 250 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 45 நாட்கள் மட்டுமே உள்ளது. ஆகையால் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்த பிறகு மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *