அமெரிக்காவின் ஏர்பஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஆயிரம் பொறியாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய அமெரிக்க ஜெட் உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் இந்திய பிரிவு தலைவர் சலீல் குப்தா உலக அளவில் 13 ஆயிரம் பேரை நடபாண்டில் பணியமர்த்த ஏர்பஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏர்பஸ் நிறுவனம் குறைந்த ஊதியம் அதிகம் திறமை வாய்ந்த இந்திய பொறியாளர்களை வேலைக்கு அமர்த்த ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பொறியியல் பட்டம் பெறுவதாக குறிப்பிட்ட சலீல் குப்தா அதில் பல திறமை வாய்ந்தவர்களும் உள்ளனர். அவர்களுக்கு ஏர்பஸ் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.