தரமான பீடி இலை மற்றும் தூள் வழங்கக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் தனியார் பீடி கடை உள்ளது. இங்கு வழங்கப்படும் பீடி இலை தரம் மற்றும் எடை குறைவாக உள்ளதாக பீடி சுற்றும் பெண்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் திடீரென கடை முன்பாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு தரமான பீடி இலை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நிர்வாகிகள் தரமான பீடி இலை மற்றும் தூள் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.