தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்த கருணாநிதி , ஜெயலலிதா மறைவுக்கு பின் சினிமா பிரபலங்கள் பலரும் அரசியல் பேசி வருகின்றனர்.
தமிழக அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்து வந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரின் இறப்புக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரைத்துறை சார்ந்த பலரும் அரசியல் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை நான் நிரப்புவேன் என சொல்லிக் கொண்டு அண்மைக்காலமாக அரசியல் பேசி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி தொடக்கி அரசியல் பேசும் கதாநாயகர்கள் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்லும்.

இந்த வரிசையில் அதிகம் பேசப்படுபவர் விஜய். அவரின் படம் தொடங்கி , நடவடிக்கை முழுவதும் அரசியல் புகுந்து விளையாடும். தமிழக இளைஞர்களின் கனவு நாயகனாக , தளபதியாக விளங்கும் விஜயின் அரசியல் வருகைக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்து இருக்கின்றனர். அதற்கு தொடக்க புள்ளி போடும் வகையில் திருச்சி மாவட்ட விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் , தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது , அந்த வெற்றிடத்தை விஜய் நிரப்ப அரசியலுக்கு வரவேண்டும் என தீர்மானம் போட்டுள்ளனர்.