என்னால தாங்க முடியல… எப்போதும் சண்டை போட்டுட்டே தான் இருக்காங்க… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள செல்வ நகர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லூர்து கிளன் பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த பவித்ரா தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த பவித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருச்சி செஷன்ஸ் கோர்ட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.