வேலைக்கு சென்ற வங்கி ஊழியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஸ்கூட்டர் மீது டெம்போ மோதிய விபத்தில் வங்கி பெண் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கன்னங்குறிச்சி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுனிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுனிதா வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சுந்தரலிங்கம் என்பவர் ஓட்டி சென்ற டெம்போ எதிர்பாராதவிதமாக சுனிதாவின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதி விட்டது.

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த சுனிதாவின் மீது டெம்போவின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுனிதாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சுனிதா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.