ரூ 1 1/2 கோடி மோசடி…. போலி நகை கடன் வழங்கிய ஊழியர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ 1 1/2 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் ராயர் தெருவில தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நகை கடன் வழங்குவதில் மோசடி நடைபெற்று வருவதாக புகார்கள் சென்றன. எனவே இந்த வங்கியில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் போலி நகைகளை அடகு வைத்து சுமார் 1 1/2 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்தது.

இதில் தொடர்புடைய வங்கி பணியாளராலான கலைச்செல்வி மற்றும் மேற்பார்வையாளர் ஜெயஸ்ரீ ஆகியோர் உடனடியாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் வங்கி நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார் மற்றும் வங்கியில் 38 நகை கடன்கள் பெற்ற 25 நபர்களும் இந்த வழக்கில் பொறுப்பாக்கபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள புலனாய்வு பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *