“ஒடிசா_வை நெருங்கும் பானி புயல்” தேர்தல் நடத்தை விதி தளர்வு….!!

தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பானி புயல் வெள்ளிக்கிழமை  ஒடிசாவில் கரையை கடப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் தளர்க்கப்பட்டுள்ளது.  

பானி புயல் வலுவடைந்து ஒடிசா கடற்கரையை நெருங்கியுள்ளது. இதனால்  ஒடிசாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் பிறப்பித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.  இதனால் ஒடிசாவின் கடலோர பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒடிசா_வில் கரையை கடைக்கும் பானி புயல் தீவிர புயலாக வலுப்பெற்று _ ள்ளதால் கடலோர மாநிலங்களில் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பானி புயல் ஏற்படுத்தும் சேதத்தை எதிர்கொள்வதற்காக,  தமிழகத்திற்கு ரூ.309.37 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.200.25 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.340.87 கோடியும், மேற்குவங்காளத்திற்கு ரூ.235.50 கோடியும் மத்திய அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. இந்த நிதி பானி புயல் சேதம் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் , மீட்புப்பணி மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.