களமிறங்கும் கிர்ட்ன்… மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகம்…!!!

முழுக்க முழுக்க கிர்ட்ன் என்ற உள்நாட்டு தயாரிப்பான இருசக்கர வாகனம் வரும் அக்டோபர் மாதம் சந்தைக்கு வருகிறது.

இந்திய தயாரிப்புக்கு என்றுமே தனி மவுசு உண்டு. எத்தனை உலக தயாரிப்புகள் உள்ளே வந்தாலும் உள்ளூர் தயாரிப்பு என்றாலே தனி அடையாளம் தான். அப்படிப்பட்ட தனித்த அடையாளத்துடன் இருசக்கர வாகன உலகில் வரும் அக்டோபரில் அறிமுகமாகிறது கிர்ட்ன். ஒன் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் இந்த பைக் ஆனது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் சிறப்பு கொண்டது.

முதல் கட்டமாக தலைநகர் டெல்லி, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விற்பனைக்கான மையங்களை அமைக்கும் நடவடிக்கைகளில் இந்த நிறுவனம் களமிறங்கியுள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் அக்டோபர் முதல் வாரத்தில் வினியோகம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த அசத்தலான பைக்கின் விலை 1.21 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *