டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ராமலிங்க அடிகளார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த மது விற்பனை கூடங்கள், உரிமம் பெற்ற தனியார் ஹோட்டல்களின் மது கூடம், முன்னாள் படை வீரர் மது விற்பனை கூடம் ஆகியவற்றை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறி செயல்பட்டாலும் அல்லது கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.