பாலா,சூர்யா இணையும் புதிய படம்…. ஹிட் கூட்டணியின் ஹீரோயின் யார் தெரியுமா?

பாலா, சூர்யா இணையும் புதிய படத்தில் கதாநாயகி யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் சில முக்கிய பிரபலங்களின் கூட்டணியில் உருவாகும் படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் பிரபல இயக்குனர் பாலாவுடன் முன்னணி நடிகர் சூர்யா இணையும் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகிறது. அதன்படி பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா, பிதாமகன், அவன் இவன் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இயக்குனர் பாலா பிரபல நடிகர் அதர்வாவை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் பாலா இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *