இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பதே பக்ரீத் பண்டிகை …!!

இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பதையே பக்ரீத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது.

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் ஆக போற்றப்படுவது பக்ரீத் பண்டிகை. ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாள் , ஹஜ் பெருநாள் அப்படின்னு பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதில் பெருநாள் தொழுகை நடைபெறுகின்றது. அப்புறம் ஆரோக்கியமான ஆடு , மாடு , ஒட்டகம் இது எல்லாத்தையுமே குருபானி கொடுக்கப்படுவது உலக வழக்கம். தமிழ்நாட்டில் ஆட்டை பலியிட்டுவது அடிப்படையாக கொண்டு பக்ரீத் கொண்டாடப்பட்டுகின்றது.

Image result for பக்ரீத் பண்டிகை

பொருளாதாரம் சிறப்பாக இருக்கிற இஸ்லாமியர்கள் ஹச் செய்றத அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும் வைத்துள்ளனர்.புனிதப் பயணமாக மெக்கா செல்வது தான் இந்த புனித கடமைகளின் கடைசியானது. இதில் இறைவனுக்காக சிறப்பு தொழுகை நடத்தப்படுவது, தியாகத் திருநாளான முக்கியமான அம்சம்.  உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இந்த நாளில் புது டிரஸ் போட்டுக் கொண்டு தொழுகைகள் ,  பலியிடல் என்பது  இந்த தியாகத்திருநாளின் சிறப்பம்சம் ஆகும்.

பக்ரீத் நாளன்று  இல்லாதவருக்கு கொடுத்து உதவுவது என்கிற கோட்பாட்டை தீவிரமாக கடைபிடிக்க படுகின்றது. ஆடு , மாடு , ஒட்டகம் என்று  இஸ்லாமியர்கள் தங்கள் வசதிக்கு தகுந்த மாதிரி பலியிட்டு அதாவது குருபானி செய்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பது ஒரு உன்னதமான வணக்க வழிபாடு இஸ்லாத்தில் சொல்லப்படுகின்றது.குர்பானியில் பிராணியை அறுக்கும் போது அதனுடைய ரத்த சொட்டு பூமியில விழுவதற்கு முன்பே அல்லாஹ்விடத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுவதாக சொல்லப்படுகிறது. அதனால மனம் திறந்து குர்பானி கொடுக்க நபிகள் நாயகம் சொல்லி இருப்பதாக இஸ்ஸாத் சொல்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *