மிரட்டி வரும் பஜாஜ் … புதிய பல்சர் 125 நியான் ..!!

பஜாஜ் நிறுவனம் பல சிறப்பான அம்சங்களை கொண்ட புதிய  பல்சர் 125 நியான் மாடலை அறிமுகம் செய்துள்ளது .

இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 125 நியான் என்ற  மோட்டார்  சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பல்சர் 125 நியான் மாடலானது  இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 64,000 மேலும் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 66,618 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த  புதிய பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் நியான் புளு, சோலார் ரெட் மற்றும் பிளாட்டினம் சில்வர் என மூன்று விதமான  நிறங்களில் கிடைக்கிறது.

Related image

குறிப்பாக இவை அனைத்தும் மேட் பிளாக் பெயின்ட் நிறத்தில் கிடைக்கின்றன. இந்த  பஜாஜ் பல்சர் 125 நியான் மாடலில் 124சிசி DTS-i சிங்கிள் சிலிண்டருடன் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 11.8 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம் மற்றும் 11 என்.எம். டார்க் @6500 ஆர்.பி.எம். செயல்திறனை  வழங்குகிறது. இதனுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

Image result for pulsar 125 neon

மேலும்  , பஜாஜ் நிறுவன வாகனங்களின் விலை அதிகரிப்பால் , புதிய பல்சர் 125 நியான் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 125 சிசி வாகனங்களில் சி.பி.எஸ். வசதியும், அதிக திறன் கொண்ட வாகனங்களில் ஏ.பி.எஸ். வசதியும்  வழங்க அனுமதி அமலாகியிருப்பதால், வாகனங்களின் விலையானது அதிகரிக்கப்படுகிறது. 

Related image

இதுதவிர 2020 ஆம் ஆண்டு முதல் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பின் வாகனங்களின் விலை அதிகமாகும் என்பதால் பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் தனது பல்சர் 150 மாடல்களின் விலையை அதிகரித்தது.