‘ORMAX MEDIA’  நிறுவனம் மாதந்தோறும் பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.  கடந்த மாதம் விஜய் முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த மாதம் அவர் பின்னுக்கு தள்ளப்பட்டார். அந்த வகையில் பிரபாஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார். இது அவரது பேன் இந்தியா சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை மேலும் உறுதிப்படுத்தி உள்ளது. அதன் பின் இரண்டாவது இடத்தை தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக விளங்கி வரும் தளபதி விஜய் பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தை ஷாருக்கானும், நான்காவது இடத்தை ஜூனியர் என்.டி.ஆர்-ரும் பிடித்துள்ளனர். அதன் பின்பு ஐந்தாவது இடத்தை தமிழ் சினிமாவில் நடித்து, பல லட்சம் ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் நடிகர் அஜித் பிடித்துள்ளார். ஆறாவது இடத்தை அல்லு அர்ஜுனும், ஏழாவது இடத்தை மகேஷ் பாபு பிடித்துள்ளனர். அதன் பின்பு ஒன்பதாவது இடத்தை ராம்சரண் பிடித்துள்ளார். பத்தாவது இடத்தில் சல்மான் கான் உள்ளார்.